×

கராத்தேவில் 10 மணி நேரத்தில் 2.80 லட்சம் கிக் செய்து உலக சாதனை படைத்த மாணவ –மாணவிகள்

கூடுவாஞ்சேரி: ஓட்டேரியில் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக 10 மணி நேரத்தில் 2 லட்சத்து 80 ஆயிரம் கிக் செய்து, 100 கராத்தே மாணவ- மாணவிகள் உலக சாதனை படைத்தனர். சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓட்டேரி விரிவு பகுதியில் உள்ள `இந்தியன் டைகர் டாங் – சூ-டு’ கராத்தே பயிற்சி மையத்தில், அரசு தொடக்க மற்றும் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகள் 100 பேர் ஒன்றிணைந்து 10 மணி நேரத்திற்குள் 2 லட்சத்து 80 ஆயிரம் கிக் செய்து உலக சாதனை செய்யும் நிகழ்ச்சி அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் காலை 8 மணி அளவில் தொடங்கி மாலை 6 மணி அளவில் முடிவடைந்தது. இதில், அதன் ஒருங்கிணைப்பாளர் டைகர் விஜயகுமார் தலைமை தாங்கினார். சோழன் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் நிமலன் நீலமேகம், சிவகங்கை மாவட்டத்தின் அரசு மருத்துவமனையின் மருந்தாளுனர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக வண்டலூர் திமுக ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்விவிஜயராஜ், ஒன்றிய கவுன்சிலர் அம்சவல்லி வடிவேலு, ஓட்டேரி இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் ஆகியோர் மாணவ, மாணவியர்க்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினர். இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

The post கராத்தேவில் 10 மணி நேரத்தில் 2.80 லட்சம் கிக் செய்து உலக சாதனை படைத்த மாணவ – மாணவிகள் appeared first on Dinakaran.

Tags : Karate ,Kootuwancheri ,Otteri ,
× RELATED கராத்தே அசோசியேசின் செயற்குழு கூட்டம்